2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மணிரத்தினம் படத்தில் விக்ரம் - சூர்யா

A.P.Mathan   / 2010 நவம்பர் 02 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னணி நட்சத்திரங்களை இணைக்கும் தைரியம் ஒருசில இயக்குநர்களுக்கே இருக்கிறது. அந்தவகையில் இயக்குநர் மணிரத்தினம் படங்களில் எத்தனை பெரிய நட்சத்திரங்கள் வேண்டுமானாலும் ஒன்றிணைந்து நடிக்க சம்மதிப்பார்கள்.

'ராவணன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் மணிரத்தினம். இந்நிலையில்தால் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் மாறுபட்ட வேடங்களில் அசத்திவரும் சூரியாவும் விக்ரமும் மீண்டும் இணையும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறார். சூர்யாவும் விக்ரமும் ஏற்கனவே இயக்குநர் பாலாவின் 'பிதாமகன்' படத்தில் நடித்திருந்தார்கள். இப்பொழுது மேலும் உச்சிக்கு சென்றிருக்கும் இவ்விருவரும், மீண்டும் இணையக் கிடைத்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஸ் பாபுவும் நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. ஆகமொத்தத்தில் பல நட்சத்திரங்களை ஒரே படத்தில் இணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் மணிரத்தினத்தின் முயற்சினை வெள்ளித்திரையில் காண, ரசிகர்கள் ஆர்வமாகியிருப்பதென்னமோ உண்மைதான்.


  Comments - 0

  • shaik dawood shahul hameed Wednesday, 03 November 2010 09:08 PM

    mindum surya vikram enaivatha super hit movie ena ninaikkeren thanks mani rathnam sir.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--