2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

செல்வராகவனின் இரண்டாம் உலகம்

A.P.Mathan   / 2011 ஜனவரி 14 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருமண வாழ்க்கையின் இரண்டாம் உலகத்துக்குள் காலடி எடுத்து வைக்க முடிவுசெய்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். தனது தம்பி தனுஷை வைத்து 'இரண்டாம் உலகம்' படத்தினை இயக்கிக் கொண்டிருக்கிறார் செல்வராகவன். அப்படத்திற்கு உதவி இயக்குநராக பணிபுரியும் கீதாஞ்சலியிடம் மனதினை பறிகொடுத்துவிட்டாராம் செல்வா.

இவ்விடயம் ஏற்கனவே அரசல் புரசலாக பல ஊடகங்களில் வெளிவந்தபோதிலும் இப்பொழுது உத்தியோகபூர்வமாக இயக்குநர் செல்வராகவன் அதனை ஊடகங்களுக்கு அறிவித்திருக்கிறார். 'கீதாஞ்சலியுடன் புதிய வாழ்க்கை பயணத்தை தொடர முடிவுசெய்திருக்கிறேன். எதிர்வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெறும். இதுவரைகாலமும் என்னை ஊக்கப்படுத்திய ஊடக நண்பர்களுடன் இவ்விடயத்தினை பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

ஏற்கனவே சோனியா அகர்வலை காதலித்து கரம்பிடித்திருந்த செல்வராகவன் மனம் ஒத்துவராமல் இடையில் பிரிந்துவிட்டார்கள். இப்பொழுது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகளான கீதாஞ்சலியை காதலிக்க தொடங்கியிருக்கிறார். இருவரும் ஒரே துறையில் இருப்பதால் அவர்களுக்குள் நல்ல கருத்து ஒற்றுமை காணப்படுகிறதாம். ஆகையினால் இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை நலமாக இருக்குமென கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--