Menaka Mookandi / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் முன்னணியாக இருந்த ரீமா சென் தற்போது காதல் வலையில் சிக்கியுள்ளார். இதனை அவர் வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன் இவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல அப்போது மறுப்புத் தெரிவித்துவிட்டார் ரீமா.
இப்போது கைவசம் படங்கள் ஏதும் இல்லாத நிலையில், தனக்கும் தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என்பவருக்கும் காதல் இருப்பது உண்மைதான் என்றும், ஆனால் திருமணம் இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.
'நேற்று இரவு மும்பையில் நடந்த நள்ளிரவு விருந்தில், என்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டார் ஷிவ் கரண் சிங். உடனே ஒப்புக் கொண்டேன். அடுத்த நிமிடமே தயாராக வைத்திருந்த வைர மோதிரத்தைப் பரிசளித்தார் ஷிவ்' என்கிறார் ரீமா.



9 minute ago
3 hours ago
27 Oct 2025
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
3 hours ago
27 Oct 2025
27 Oct 2025