2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

'குத்து' ரம்யாவின் 'புண்ணியவான்'

A.P.Mathan   / 2011 ஜூன் 14 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்னடத்தில் பிரபல்யமான திவ்யா ஸ்பென்டனா – தமிழில் குத்து படத்தில் ரம்யா என்ற பெயரில் அறிமுகமாகினார். அன்றிலிருந்து 'குத்து' ரம்யா என்றே எல்லோரும் அழைத்தனர். அந்த பெயரை அவரும் ரொம்ப நேசித்தார்.

குத்து படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துவந்தார். அண்மைக்காலத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படம் ரம்யாவுக்கு நல்ல பெயரினை தேடிக்கொடுத்தது. ரம்யாவின் வருகையின் பின்னர் தமிழ் திரையுலகில் நமீதாவின் மார்க்கட்டும் சரியத் தொடங்கியதென்னமோ உண்மைதான்.

பரந்த மனதினைப் போலவே பரபரப்பாக சிக்கல்களிலும் சிக்கிக் கொள்பவர் இந்த 'குத்து' ரம்யா. இப்பொழுது தன்னுடைய காதலனின் பெயரை முதுகின் மேற்பகுதியில் குத்தி பரபரப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார். காதலனின் பெயர் ரபேல். இதற்கு அர்த்தம் புண்ணியவான் என்பதாம். அதனால்தான் தன்னை எந்நேரமும் ஆசீர்வதிப்பவனாக, புண்ணியவானாக தன் காதலன் இருக்க வேண்டுமென தன் உடலிலேயே பச்சை குத்தியிருக்கிறாராம். உலகின் பழமைவாய்ந்த ஹிப்று மொழியில் இந்த பெயரின் அர்த்தத்தினை புரிந்துகொண்ட சுவிட்ஸர்லாந்தின் தொழிலதிபர் ரபேல் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .