2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

சோனியாவின் வாழ்க்கை ரகசியங்கள்...

Menaka Mookandi   / 2011 நவம்பர் 29 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இயக்குநர் செல்வராகவனால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அவரது வாழ்க்கைத் துணையாக மாற்றப்பட்டவர் நடிகை சோனியா அகர்வால். இருவரும் வாழ்க்கையில் இணைந்த வேகத்திலேயே பிரிந்தும் சென்றனர். இதனால் சுமார் 3 வருடங்களாக நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்த சோனியா, தற்போது அதை காற்புள்ளியாக மாற்றி மீண்டும் திரையுலகுக்குள் பிரவேசித்துள்ளார்.

ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து, 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார் சோனியா. ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் புன்னகைப்பூ கீதா தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சோனியா, உரையாற்றுகையில், 

'வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு, என் வாழ்க்கையில் சில ரகசியங்கள் உள்ளன. அவற்றை எப்போதும் சொல்ல மாட்டேன். எல்லோருடைய வாழ்க்கையையும் போல் நடிகையின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சோகம், இன்பம், துன்பம், ரகசியம் இருக்கும். குறிப்பாக, நடிகையின் வாழ்க்கையில் பல ரகசியங்கள் இருக்கும். வெளியே தெரியாத பக்கங்கள் இருக்கும். அந்த பக்கங்களை 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' திரைப்படத்தில் காட்டியிருப்பதாக சொன்னார்கள்.

நடிகையின் வாழ்க்கையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் ஆவல் இருக்கும். எனக்கும் அந்த ஆவல் நிறைய உண்டு. இந்தப் படம் எனக்கே பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது. இந்தப் படம் பெறவிருக்கும் வெற்றிக்கு அதுவே பெரிய உதாரணம்.

'நான் மூன்று வருடங்களாக நடிக்கவில்லை. மறுபடியும் நடிக்க வந்தபோது, ஒரு புதுமுகம் போல் உணர்ந்தேன். உடன் நடித்தவர்கள், இயக்குநர் போன்றவர்கள்தான் என்னை மிக இயல்பாக இருக்க உதவினார்கள். எல்லோருடைய வாழ்க்கையிலும் ரகசியங்கள் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. என் வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள்ளன.

நான் நடிகையாக இருப்பதால், என் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். என் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை. 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தின் கதைக்கும், என் சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. ஒரு சதவீதம் கூட, என் சொந்த வாழ்க்கையை இந்தப் படத்தில் சொல்லவில்லை' என்றார்.


  Comments - 0

  • Ganesh Tuesday, 29 November 2011 05:36 PM

    if she become a actor then her organ will go for high rate that is the main reason.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .