2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

மகனுடன் இருமுடி கட்டிய தனுஷ்...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக எதிர்வரும் 15ஆம் திகதி கோவில் நடை திறக்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள்.

எனவே முக்கிய பிரமுகர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் நாட்களில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தமிழகத்தில் இருந்து நடிகர்கள் பலரும் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு செல்வார்கள்.

நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு சபரிமலைக்கு தீர்த்த யாத்திரை சென்றார். இந்த ஆண்டும் அவர் சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மலையாள திரைப்படம் ஒன்றில் கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கான படப்பிடிப்பு தொடக்க விழா கொச்சியில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து நேராக சபரிமலைக்கு சென்றார்.

அவருடன் மகன் யாத்ரா மற்றும் பிரபல பாடகர் ஜேசுதாசின் மகனும் பின்னணி பாடகருமான விஜய் ஜேசுதாசும் சபரிமலைக்கு சென்றனர்.

அங்கு மூவரும் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றனர். ஐயப்பன் கோவில் நடை, உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பிறந்தநாள் விழாவுக்காக திறக்கப்பட்டிருந்தது.

எனவே கோவிலுக்கு சென்ற தனுசும், மகன் யாத்ரா, பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ் மூவரும் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .