2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

தலைவாவின் பிரமாண்டம்...

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவா. இது இம்மாதம் 9ஆம் திகதி ரம்ழான் பண்டிகையை முண்ணிட்டு வெளியாகவுள்ளது.

இயக்குநர் விஜய்யின் ஆஸ்தான கதாநாயகி அமலாபால் தான் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் காமெடி நடிகர் சந்தானம், சத்யராஜ், பொலிவூட் டிவி நடிகை ராகினி நந்தவாணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமாகி அவுஸ்திரேலியாவில் நிறைவடைந்தது. எனவே எதிர்வரும் 9ஆம் திகதி 'தலைவா' தமிழகத்தில் மட்டும் 450க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

அத்துடன், உலகம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தலைவா வெளியிடப்படவுள்ளது. தலைவாவின் பிரமாண்ட ரிலீஸ் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ரம்ழான் பண்டிகை அன்று இந்தி நடிகர் சல்மான் கான் தனது திரைப்படங்களை வெளியிட்டு செய்து வெற்றி கண்டுள்ளாராம். இந்நிலையில் விஜய்யின் திரைப்படம் ரம்ழான் அன்று ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--