2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

புதிய சொய்ஸ்...

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்பட கதாநாயகி ஸ்ரீதிவ்யாதான் இப்போது கோடம்பாக்கத்தின் புதிய இயக்குநர்கள் சொய்ஸ். அடக்கமான அழகு, கிராமத்து உடை - நாகரீக உடை என அனைத்திலுமே மனதைக் கவரும் தோற்றம்.

போதாக்குறைக்கு பார்வையாளர்களைத் துள்ள வைக்கிற இளமையும் நடிப்பும். இது போதாதா. முதல் திரைப்படத்திலேயே பாஸ் பண்ணிவிட்ட ஸ்ரீதிவ்யாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். அதுவும் முன்னணி நாயகியான ப்ரியா ஆனந்தைத் தூக்கிவிட்டு, இவரை ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு!

ஜி.வி பிரகாஷ் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் 'பென்சில்'. இந்த திரைப்படத்துக்கு முதலில் ப்ரியா ஆனந்த் தான் நாயகி என்று அறிவித்துமிருந்தார்கள். இந்தப் படத்தில் ப்ளஸ்டூ மாணவராக நடிக்கிறார் ஜி.வி பிரகாஷ்.

ஜி.வி.பிரகாஷுக்கு ப்ரியா ஆனந்த் ஜோடியாகத் தெரிவாரா? அல்லது டீச்சர் மாதிரி தெரிவாரா? என்ற சந்தேகம் வந்துவிட்டதாம். எனவே அவருக்குப் பதில், பார்க்க ஒரிஜினல் ப்ளஸ்டூ மாணவி மாதிரியே காட்சி தரும் ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்துவிட்டாரகளாம்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--