Freelancer / 2026 பெப்ரவரி 21 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெள்ளை மாளிகை அறிவித்த பெரும்பாலான உலகளாவிய இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானவை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே டிரம்ப் இந்த புதிய வரித் திட்டத்தை வெளியிட்டார்.
இந்தத் தீர்ப்பு, வரிகளை எதிர்த்துப் போராடிய வர்த்தக நிறுவனங்களுக்கும் அமெரிக்க மாநிலங்களுக்கும் கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து உரையாற்றிய டிரம்ப், வரித் தொகையைத் திரும்பப் பெறுவது சட்டப் போராட்டமின்றி நடக்காது என்று சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான விவகாரம் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இழுபறியாக இருக்கும் என்றும், இதை தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அமெரிக்காவில் முதலீடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதாக அவர் வாதிடும் இந்த இறக்குமதி வரிகளைத் தொடர, பிற சட்டங்களை நாடுவேன் என்றும் அவர் கூறினார். R
3 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
20 Feb 2026