2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஹன்சிகாவின் கையை பிடித்து இழுத்த இரசிகர்கள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவா கடற்கரையில் நடிகை ஜெயப்பிரதா தனது மகன் சித்தார்த்தை வைத்து தயாரிக்கும் 'உயிரே உயிரே' படத்தின் பாடல் காட்சியினை படமாக்கிகொண்டிருந்த வேளை இதனை பார்க்க கடற்கரையில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.

கடற்கரையில் கூடியிருந்த ரசிகர்கள் 'ஹன்சிகா ஹன்சிகா' என்று அவரது பெயரை கூப்பிட ஆரம்பித்தனர். மேலும் தங்கள் செல்போன்களில் ஹன்சிகாவை புகைப்படம் எடுத்தனர். திடீர் என்று ரசிகர்கள் கூட்டமாக அங்கு இருந்த பாதுகாவலர்களையும் மீறி ஹன்சிகாவின் அருகில் வந்தனர் அபபோது அவர்கள் ஹன்சிகாவிடம் ஆட்டோகிராப் கேட்டனர்.

ஆர்வக் கோளாறில் சில ரசிகர்கள் ஹன்சிகாவின் கையை பிடித்து இழுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹன்சிகா பாதுகாவலர்களினால்; மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில்,

நான் உயிரே உயிரே படப்பிடிப்பில் இருந்தபோது ரசிகர்கள் கூட்டம் கூடியது. நான் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருவதால் அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியாது என்று நினைத்தேன். ஆனால் என்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்த அவர்கள் அடையாளம் கண்டு என் பெயரைச் சொல்லி அழைத்தனர் என தெரிவித்தார்.

இந்நிலையில் ரசிகர்கள் அத்துமீறலால் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்து படப்பிடிப்பையும் இடம்மாற்றியுள்ளனர் பட குழுவினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--