2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மீண்டும் சூர்யா – நயன்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


வெங்கட்பிரபு இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் நடிகை நயன்தாரா. லிங்குசாமி இயக்கும் அஞ்சான் திரைப்படத்தைக் கிட்டத்தட்ட முடித்துக் கொடுத்துவிட்டார் சூர்யா. சில காட்சிகள் மட்டும்தான் எஞ்சியுள்ளன.

இதற்கடுத்து சூர்யா, வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான பூஜையும் சமீபத்தில் போடப்பட்டது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் ஸ்ருதிஹாசனிடம் பேசினார்களாம். ஸ்ருதி இப்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு நடிகையைத் தேடியவர்களுக்கு, நயன்தாரா பொருத்தமான சொய்ஸாகத் தெரிந்தாராம்.

எனவே நயன்தாராவையே சூர்யாவிற்கு ஜோடி சேர்க்க முடிவு செய்துள்ளனர். இதற்குமுன் கஜினி படத்திலும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ஆதவன் படத்திலும் சூர்யாவும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளனர்.

நயன்தாரா இப்போது ஜெயம் ரவியுடன் ஒரு படம், உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X