Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தல அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் 14.05 கோடி இந்திய ரூபாய் வசூலித்து இந்தியாவின் பொக்ஸ் ஓபீஸில் சாதனை படைத்துள்ளது.
கடந்த 5ஆம் திகதி அஜீத் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் முதல் நாளில் 10.80 கோடி இந்திய ரூபாய் வசூல் செய்துள்ளதுடன் கேரளாவில் 107 திரையரங்குகளில் வெளியான என்னை அறிந்தால், அங்கு ரூ.1.65கோடி இந்திய ரூபாய் வசூலித்துள்ளது.
கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரில் 39 திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்துக்கு முதல் நாளில் 1.71 கோடி இந்திய ரூபாய் வசூல் கிடைத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக கர்நாடகாவில் 2கோடி இந்திய ரூபாய் வசூலானதுடன் ஆந்திராவில் அடுத்த வாரம் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை உட்பட வெளிநாடுகளிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களின் வசூல் சாதனையை என்னை அறிந்தால் முறியடிக்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் 37 கோடி இந்திய ரூபாய் என்றும் இதற்கு அடுத்தபடியாக விக்ரம் நடிப்பில் வெளியான ஐ, 27 கோடி இந்திய ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் அடுத்தாக விஜய்யின் கத்தி 23 கோடி இந்திய ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 minute ago
31 minute ago
41 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
31 minute ago
41 minute ago
42 minute ago