2021 மே 18, செவ்வாய்க்கிழமை

காதலிக்க நேரமில்லை

George   / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதாநாயகிகளின் காதல் பற்றி கிசுகிசுக்கள் வருகின்றன. ஆனால் தமன்னா மட்டும் இதுபோன்ற எந்த கிசுகிசுவிலும் சிக்கவில்லை. சக நடிகர்கள் மீது காதல் வயப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வரவில்லை.

இதுகுறித்து தமன்னா கூறும்போது, காதலிப்பதற்கு எனக்கு நேரமே இல்லை. மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது.

ஒரு நடிகை என்ற முறையில் எனக்கு சினிமாவுக்கு சம்மந்தம் இல்லாத வெளி ஆட்களை சந்திப்பதற்கு நேரமே இல்லை.

திரையுலகில் என்னை சுற்றி எப்போதும் சினிமா சம்மந்தப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். சினிமாவை பற்றியே எப்போதும் சிந்திக்கவும் பேசவும் முடிகிறது.

சினிமா என்னை நிறைய மாற்றி உள்ளது. இது எனக்கு புதிய அனுபவமாக இருக்கிறது. பிரபலமாக இருப்பது கஷ்டமானது. ஆனாலும் என்னைப் பற்றி பெரிய புகார் எதுவும் இதுவரை வந்தது இல்லை. எனறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .