2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

அழகுப்புயல் மடோனா

George   / 2015 ஜூலை 31 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேமம் திரைப்படம் மூலமாக மடோனா செபஸ்டின் என்கிற இன்னொரு அழகுப்புயலை மலையாளத்தில் அறிமுகப்படுத்தி வைத்துள்ள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், அவரை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கும் தாரை வார்த்துள்ளார்.

நிவின்பாலி ஜோடியாக க்ளைமாக்ஸ் காட்சியில் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் அள்ளிய மடோனா செபஸ்டின், இப்போது தமிழில் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து அவருக்கு ஜாக்பாட் பரிசாக கிங்க லயர் திரைப்படத்தில் திலீப்புடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதை விட அவருக்கு மிகப்பெரிய கொடுப்பினை என்னவென்றால் பதினாறு வருடங்கள் கழித்து இயக்குநர்கள் சித்திக்-லால் இருவரும் இணைந்து இயக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதுதான்.

இந்தப்படத்தில் திலீப் பொய் பேசுவதில் வல்வராக நடிக்கிறார். ஆனால் திரைப்படத்தில் அவரது பெயர் என்ன தெரியுமா..? சத்யா நாராயணன். மடோனா இதில் மொடர்ன் கேர்ள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .