2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

ரம்யாவின் மறுபிரவேசம்

George   / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரி, குத்து, பொல்லாதவன் உட்பட பல தமிழ்த் திரைப்படங்களிலும் கன்னட திரைப்படங்களிலும் நடித்த நடிகை ரம்யா, தான் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக கூறியுள்ளார்.  

கர்நாடகத்தை சேர்ந்த இவர், சில வருடங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். முதலில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியதால் கர்நாடகத்தில் ரம்யா தோல்வி அடைந்தார். இந்த நிலையில் காங்கிரசில் ரம்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. தனிப்பட்ட முறையிலும் அவரை கடுமையாக விமர்சித்தார்கள். 

இதனால் அரசியலில் இருந்து விலகி இலண்டன் சென்று ஓய்வு எடுத்துவிட்டு அங்கிருந்து திரும்பிய ரம்ய,  மீண்டும் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். புனேயில் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்ப கல்லூரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதில் ராகுல் காந்தியுடன் ரம்யாவும் கலந்து கொண்டார். 

அதன்பிறகு மாண்டியாவில் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ரம்யா கூறும்போது, ''கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்த பின்பு மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டு உள்ளேன்' என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .