2021 மார்ச் 01, திங்கட்கிழமை

'ஸ்ரீதேவினா அவ்ளோாா புடிக்கும்'

George   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'புலி திரைப்படத்தின் ஹைலைட்டே என்னுடைய அபிமான நடிகை ஸ்ரீதேவியுடன் சேர்ந்து நடித்ததுதான். ஸ்ரீதேவி அவ்வளவு பண்பானவர், திறமையானவர், அழகானவர், அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்' என நடிகை ஸ்ருதி ஹாசன் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் நடைபெற்ற புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைத்து இதனை கூறியது போதாதென்று தனது டுவிட்டர் தளத்தில் வேறு ஸ்ருதி இதனை அழுத்தமாக பதிவிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி, சிவாஜி - பத்மினி போல, 80களில் கமல் - ஸ்ரீதேவி என்றால் அந்தக் கால சினிமா ரசிகர்களுக்கு அவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும். 

அவர்களிருவரும் நடிக்கும் திரைப்படங்களில் அவர்களுக்குள் இருக்கும் ஜோடிபொருத்தம் அப்படி. இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த பல திரைப்படங்கள் 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி கண்டவை. 

தமிழில் 1982ஆம் ஆண்டு வெளிவந்த வாழ்வே மாயம் திரைப்படம்தான் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஜோடியாக சேர்ந்து நடித்த கடைசி திரைப்படம். அந்தப் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

இந்த 33 வருட இடைவெளியில் இதுவரை கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் தமிழில் அதற்குப் பிறகு இணைந்து நடித்ததில்லை. ஆனாலும், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், புலி திரைப்படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓ..! அப்படியென்றால் புலி திரைப்படத்தின் ஹைலைட் விஜய் இல்லையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது...

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .