2021 மார்ச் 08, திங்கட்கிழமை

SIIMA விருதுகள்

George   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடம்தோறும் வழங்கப்பட்டுவரும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் இந்தாண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை டுபாயில் கோலாகலமாக நடந்தது. 

நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடந்த இவ்விழாவில், சிறந்த திரைப்படத்துக்கான விருது, கத்தி திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. வேலையில்லா பட்டதாரி திரைப்படத்துக்காக தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான விருதும் அரண்மனை திரைப்படத்துக்காக ஹன்சிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. 

இது தவிர சிறப்பு விருதாக மெட்ராஸ் திரைப்படத்துக்காக கார்த்திக்குக்கும் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்துக்காக அமலாபாலுக்கும் தென்னிந்திய சினிமாவின் சிறப்பு நடிகைக்கான விருது எமி ஜெக்சனுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது பாரதிராஜாவுக்கும் வழங்கப்பட்டது.

விருதுகள்

சிறந்த நடிகர் - தனுஷ் (வேலையில்லா பட்டதாரி), சிறந்த நடிகை - ஹன்சிகா மோத்வானி (அரண்மனை), சிறந்த இயக்குநர் - ரஞ்சித் (மெட்ராஸ்), சிறந்த திரைப்படம் - கத்தி, சிறந்த குணச்சித்திர நடிகர் - பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா), சிறந்த குணச்சித்திர நடிகை - சரண்யா பொன்வண்ணன் (வேலையில்லா பட்டதாரி), சிறந்த அறிமுக ஹீரோ - சந்திரன் (கயல்), சிறந்த அறிமுக ஹீரோய்ன் - கத்ரீன் தெரஸா (மெட்ராஸ்), சிறந்த அறிமுக இயக்குநர் - வேலராஜ் (வேலையில்லா பட்டதாரி), சிறந்த வில்லன் நடிகர் - நீல் நிதின் முகேஷ் (கத்தி), சிறந்த இசையமைப்பாளர் - அனிரூத் (கத்தி), சிறந்த பாடலாசிரியர் - தனுஷ் (அம்மா அம்மா... பாடல் - வேலையில்லா பட்டதாரி), 

சிறப்பு விருதுகள் 

வாழ்நாள் சாதனையாளர் விருது - இயக்குநர் பாரதிராஜா, சிறந்த நடிகர் (சிறப்பு விருது) - கார்த்தி (மெட்ராஸ்), சிறந்த நடிகை (சிறப்பு விருது) - அமலாபால் (வேலையில்லா பட்டதாரி), தென்னிந்திய சினிமாவின் சிறப்பு விருது - தனுஷ், தென்னிந்திய சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகை - எமி ஜாக்சன், சிறந்த பாடல் (சிறப்பு விருது) - அனிரூத் (வேலையில்லா பட்டதாரி).

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .