Editorial / 2019 நவம்பர் 22 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்துவதற்கான பணிகள், மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
முதலாவது கூட்டத்தொடர் ஆரம்ப நாளன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அக்கிராசன உரை நிகழ்த்துவார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்றத்தின் படைகளச் சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ, புதிய அரசாங்கம் அமைந்தவுடன், நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான நாள் ஒதுக்கப்படுமென எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர், டிசெம்பர் 3ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், தேவையேற்படின், பிரதமரின் ஆலோசனைப்படி, அதற்கு முந்திய திகதியொன்றில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவதற்கு, சபாநாயகர் அழைப்பு விடலாம்.
அதன் பிரகாரம், புதிதாக அமையப்பெற்றுள்ள அரசாங்கத்தின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, டிசெம்பர் 3ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ, நாடாளுமன்றத்தைக் கூட்டக்கூடுமென, படைகளச் சேவிதர் மேலும் கூறினார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி முதற்கோலாசான், சபை முதல்வர், ஆளுங்கட்சி முதற்கோலாசான் ஆகியவற்றுக்கான பெயர்கள், கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே, அறிவிக்கப்படும்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago