Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 17 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலுக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதி இன்று (17) இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடாக வழங்குமாறும் உத்தவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பிரதிநிதிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது பாரதூரமான விடயம் என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, இவ்வாறான செயற்பாடுகளால் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை இல்லாது போகும் என்றும் குறிப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அக்குரஸ்ஸ நகரிலுள்ள வாடி வீடொன்றில் 14 வயது சிறுமி ஒருவரை அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனில் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், இரண்டு மாதங்களும் 10 நாட்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago