Editorial / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
6.இக்பால் அலி
அக்குறணை சியா மாவட்ட வைத்தியசாலையில், சேவையில் ஈடுபடும், ஓர் அம்பியுலன்ஸ் வண்டியின் மூலம், முழுமையான சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும், மேலதிகமான இன்னுமொரு அம்பியுலன்ஸ் வண்டி தேவையாக உள்ளது எனவும் அக்குறணை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அக்குறணை வைத்தியசாலையில் இருந்து, நோயாளி ஒருவரை கண்டி அல்லது பேராதனை போதனா வைத்தியசாலைக்கோ அனுப்பினால், பாதையில் ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக திரும்பி வருவதற்கு கால தாமதம் ஆவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த நேரத்தில் மற்றுமொரு நோயாளியை, வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்ப நேரிடும் போது, பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதெனவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை இதற்கு எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லையென்றும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும், வைத்தியசாலை வைத்தியசாலை தரப்பினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago