Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஜூலை 17 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம், மத்திய அரசாங்கத்தால் நடைமுறையில் தரப்படுமானால், மாகாண சுகாதாரத்துறையை அபிவிருத்தியடையச் செய்ய முடியும்” என, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மத் நஸீர், இன்று தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறை எதிர்நோக்கும் சவால்கள் குறித்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிழக்கு மாகாணத்திலேயே அதிகமான ஆதார வைத்தியசாலைகள் உள்ளன. மாகாண நிர்வாகத்தின் கீழ், 13 ஆதார வைத்தியசாலைகளும் மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ், 4 என மொத்தம் 17 ஆதார வைத்தியசாலைகள் கிழக்கில் உள்ளன.
“கிழக்கு மாகாணத்தில் வைத்தியர், தாதியர் மற்றும் ஊழியர்கள் போன்ற ஆளணிப் பிரச்சினைகளை, கிழக்கு மாகாண சுகாதாரத்துறை எதிர்நோக்கி வருகின்றது. இவ்வாறான சவால்கள், முழு இலங்கையிலும் காணப்படுகின்றது.
“அரசியலமைப்பில் உள்ளவாறு, கிழக்கு மாகாணத்துக்கான முழுமையான அதிகாரம், மத்திய அரசாங்கத்தால் நடைமுறையில் தரப்படுமானால் இவ்வாறான பிரச்சினைகளை, மாகாண மட்டத்திலேயே தீர்த்துக்கொள்ள முடியும்.
“இந்த விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றார். கிழக்கு மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவற்றினைத் தீர்த்து வைத்து வருகின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
42 minute ago
58 minute ago
5 hours ago