2021 மே 08, சனிக்கிழமை

அநுரவின் பிணை மனுவை விசாரிக்க மேல் நீதிமன்றம் தீர்மானம்

George   / 2016 ஜூலை 25 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தீர்மானித்துள்ளது.

2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புள்ள சந்தேகத்தில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X