Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2017 ஜூன் 08 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றினால் ஏற்பட்ட, அனர்த்த நிலைமைகளை வழமைக்கு கொண்டுவருவதற்காக, மிகக்கூடிய விரைவில் நன்கொடைகளை வழங்கும் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அழைப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
அனர்த்த நிலைமை காரணமாக, பல மாவட்டங்களில் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கிராமங்கள் பலவும் அழிவடைந்துள்ளன. அனர்த்தத்தில் சிக்குண்டவர்களுக்கு கடந்த சில நாட்களாக, பொருட்களுடன் கூடிய நிவாரணங்கள் கிடைத்தன.
எனினும், எதிர்காலத்தில் இவ்வாறான பொருட்களுடன் கூடிய ஆதாரங்களின்றி, பாதிக்கப்பட்ட இடங்களை தனித்தனியாக அபிவிருத்தி செய்வதற்கான நோக்கிலேயே இந்த நன்கொடையாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்துடன் கூடிய அபிவிருத்தித் திட்டமும் இந்த மாநாட்டின் போது, அரசாங்கத்தினால் முன்வைப்பதற்கும் அதனூடாக, சர்வதேச நிதியுதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் நன்கொடையாளர் மாநாட்டு நடத்தப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 Jul 2025