2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்டத்திலுள்ள நெல் வயல்களில் புதுவகையான நோய்

Super User   / 2010 ஜூன் 20 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக நெற்செய்கைக்கு பரவிவரும் புது வகையான நோய் காரணமாக சுமார் 700 ஏக்கர் நெல்வயல்கள் அழிவடையும் நிலையிலுள்ளன.

சிறுபோக நெற்செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்கு இன்னும் 3 வாரங்களேயுள்ள நிலையில், இவ்வாறான நோய்த் தாக்கத்திற்கு வயல்கள் உள்ளாகியுள்ளன.

மேற்படி நோய் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்ளவென நோய்த் தாக்கத்திற்குள்ளான நெற்கதிர்களின் மாதிரிகளை கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உயர் விவசாய அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--