2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

அம்பலாங்கொடை, மாது கங்கையில் படகு கவிழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

Super User   / 2010 மே 30 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை, மாது கங்கையில் படகொன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்துக்கொண்டிருந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தின்போது குறித்த படகில் சுமார் 15பேர் வரையில் பயணித்துள்ள போதிலும் மூவரைத் தவிர ஏனையோர் உயிர்த் தப்பியுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

குறித்த விபத்தின்போது உயிரிழந்தவர்கள் அம்பலாங்கொடை மற்றும் கண்டியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் அம்பலாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் உயிரிழ்ந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--