Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, தன்னுடைய முகப்புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார்.
இந்த மாநாட்டுக்கு அவர், சென்றமை தொடர்பில் ஊடகங்களில் பல்வேறான கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. அதுமற்றுமன்றி எதிர்மறையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவர், தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம், இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தன்னுடைய தாய்க்கு அழைப்பிதழ் வந்துள்ளது. அவரால், இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாமையால், அந்த சந்தர்ப்பம் தனக்கு கிடைத்தது.
அதில், புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகள் என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்பதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிட்டியது. அதனூடாக பல முக்கியமாக நோக்கங்கள் தொடர்பில் கவனத்தை செல்லுத்த முடிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் தான் பங்கேற்றமை எப்படி எதிர்மறையாக இருக்க முடியும் என்றும் அவர் வினவியுள்ளார்.
எவ்வாறாயினும் தன்னுடைய பங்குபற்றல் தொடர்பில் கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிடவேண்டாம் என்றும் அதுவும் தன்னுடைய குடும்பமும் நேரெதிரே வேறுபட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் தன்னுடைய பங்குபற்றல் நாட்டுக்கு சாதகமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago