2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 3ஆவது நாளாக தொடர்கிறது

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் சிறைச்சாலையில் எட்டு அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

விரைவில் தங்களை புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரியே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ம.சுலக்ஷன், இ.திருவருள், சூ.ஜெயச்சந்திரன், இரா.தபோரூபன், சி.தில்லைராஜ், இ.ஜெகன், சி.சிவசீலன், மற்றம் த.நிமலன் ஆகியோர்,  கடந்த வெள்ளிக்கிழமை முதல், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று வருடங்களில் இவர்கள் மேற்கொள்ளும் ஐந்தாவது போராட்டம் இதுவாகும்.

எனினும் ஒவ்வொரு போராட்டத்தின்போதும், போலியான வாக்குறுதிகளை வழங்கி போராட்டம் இடையில் நிறுத்தப்பட்டுப் பின்னர் மீண்டும் போராட்டத்தில் இவர்கள் குதிப்பது தொடர்கதையாகி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X