2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முக்கிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என இலங்கை மருந்தாக்கக் கூட்டுதாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோபூர்வ டுவிட்டர் பக்கத்தில் உள்ள காணொளி ஒன்றின் ஊடாக அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தேவையற்ற முறையில் பொது இடங்களில் நடமாடுவதை தவிர்த்துகொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X