2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

அவன்கார்ட் வழக்கு; ஜூன் 26 முதல் விசாரணை

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்கார்ட் - மெரிடைம் சர்விஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி முதல், விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று அறிவித்தது. 

குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, விசாரணைக்கான திகதி குறிக்கப்பட்டது.

அத்துடன், நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்படி சந்தேகநபர்கள் இருவரதும் கடவுச் சீட்டுகளை விடுவிக்குமாறு, நீதிபதி அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X