2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஆசிரியைகளை இடமாற்றுமாறு மகஜர் கையளிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன், கொட்டகலை பிரதேசத்துக்கு உட்பட்ட பாடசாலையொன்றில், மாணவர்களின் முன் மோதலில் ஈடுபட்ட ஆசிரியைகள் இருவரையும் இடமாற்றுமாறு கோரி, நுவரெலியா வலய கல்விப் பணிமனையில், மகஜரொன்று இன்று (18) கையளிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் இணைந்து, நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளரிடம் மகஜரைக் கையளித்துள்ளனர்.

ஹட்டன், கொட்டகலை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையைச் சேர்ந்த இரு ஆசிரியைகள், மாணவர்கள் முன்னிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மோதலில் ஈடுபட்டுள்ளதுடன், தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில், கொட்டகலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணராஜா, பாடசாலையின் பெயருக்கு, அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் எந்த விடயங்களுக்கும் பழைய மாணவர் சங்கம் இடமளிக்காது என்றும் தெரிவித்தார்.

மாணவர்களைத் தவறான வழிகளுக்கு இட்டுச்செல்லும் இத்தகையக சம்பவங்கள் இனியும் இடம்பெறக் கூடாது என்று எச்சரித்த அவர், இந்த மோதல் சம்பவம் தொடர்பில், உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், ஆசிரியர்களை இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் பி.சிவலிங்கம் உட்பட பலர் இணைந்து, மகஜைரைக் கையளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--