2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஆபாச விளம்பரப்பலகை, சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தீர்மானம்

Super User   / 2010 ஜூன் 10 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆபாச விளம்பரப் பலகைகள் மற்றும் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு பெண் பொலிஸாரும் சிறுவர் சபையும் இணைந்து தீர்மானித்துள்ளன.

அத்துடன், கவர்ச்சிப் படங்களைப் பிரசுரிக்கும் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெண் பொலிஸாரும் சிறுவர் சபையும் இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், கொழும்பு நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆபாச விளம்பரப் பலகைகள் மற்றும் படங்களை அகற்றும் நடவடிக்கைகளை இவர்கள் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசி ஊடாக பயன்படுத்தப்படும் ஆபாச இணையதளங்களை தடைசெய்வதற்கான நடவடிக்கையை ஏற்கனவே பெண் பொலிஸார் மற்றும் சிறுவர் சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


   Comments - 0

 • mohomed idris Thursday, 10 June 2010 11:09 PM

  வாழ்க வளமுடன் !

  Reply : 0       0

  Sri Friday, 11 June 2010 12:17 PM

  ஸ்ரீ லங்கா அடுத்த ஆப்கானிஸ்தான்.

  Reply : 0       0

  xlntgson Friday, 11 June 2010 09:15 PM

  இது எதன் அடிப்படையில் செய்யப்படும். ஒருவருக்கு ஒருவட்டத்தை வரைந்து காட்டினாலே அது ஆபாசமாக தோன்றலாம். அதுவே ஒரு கணித பாட மாணவருக்கு பூஜ்யமாகவும், வான் சாஸ்திரிக்கு சந்திர சூரிய கோளமாகவோ, பூமி வடிவமாகவோ தெரியலாம். ஒரு குழந்தைக்கு அதுவே கோழிமுட்டை போல் தோன்றலாம். இதை எல்லாம் கண்ணைப்பறிக்கும் அரசியல் சுவரொட்டிகளையும், வாழ்த்து செய்திகள் கொண்டாட்ட அறிவித்தல்களை விழா முடிந்ததும் அகற்றுவதில் இருக்கவேண்டும். தேர்தல் முடிந்தும் இன்னும் பல இடங்களில் கண்கெடும் வண்ணம் எரிச்சலூட்டிக்கொண்டிருக்கின்றனவே!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .