2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

2016/ 2017ஆம் ஆண்டு கல்வியாண்டு: ஜனவரியில் கைநூல் வெளியாகும்

Gavitha   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“2016/ 2017ஆம் ஆண்டு கல்வியாண்டு, பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்பகுதியில் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார்.  

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், கைநூலானது மிகவும் தெளிவான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான கைநூலை, இணையத்தளத்திலும் பார்வையிட முடியும். பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  

2015-2016 கல்வியாண்டுக்காக, இந்த புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம், பெரும் வெற்றி அடைந்துள்ளது. பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் தெளிவுபடுத்தும் நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இந்தப் புதிய திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கும் தெரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.  

இதற்கமைவாக, தெரிவு செய்யப்பட்ட 300 ஆசிரியர்களுக்கான செயலமர்வு, ஜனவரி முற்பகுதியில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .