Editorial / 2020 மார்ச் 02 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 22 பேரையும் மார்ச் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று வரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த குறித்த மாணவர்களை, கொழும்பு- புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று (02) ஆஜர்ப்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேரும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக, சத்தியகிரகத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்பத்தில் குறித்த மாணவர்கள் 22 பேரும் நேற்று (01) கைது செய்யப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தவை மீறி, மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Oct 2025