Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 08 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடு உடைத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியான ஆவா குழுவின் எதிரணி இளைஞன் ஒருவரை, புலனாய்வு பிரிவினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த கணேஜி என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆவா குழுவுடன் செயற்பட்ட இந்த நபர், கடந்த பல காலங்களாக ஆவா குழுவில் இருந்து வெளியேறி தனியாக பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
பல காலமாக பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாகியிருந்த இந்த இளைஞர், நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் போது, யாழ்ப்பாண நகர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் விசாரணை முன்னெடுத்து வருகின்றதாகவும், விசாரணையின் பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும், யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .