2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

இடது இடுப்பை குத்திய குத்தூசி புஷ்பியா கைது

Kogilavani   / 2017 மே 31 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ்ஸில், தனது வலப்பகத்தில் அமர்ந்திருந்திருந்தவாறு பயணித்துக்கொண்டிருந்த 14 வயதான மாணவனின் இடது பக்க இடுப்பில் குத்தூசியால் குத்திப் பதம்பார்த்த, புஷ்பியா என்பவரைக் கைது செய்துள்ளதாக, கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.   

பாதிக்கப்பட்ட மாணவன், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புஷ்பியா என்ற அந்தப் பெண், கண்டி-தென்னக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.   

குத்தூசியால், மாணவனின் இடுப்பைப் பதம்பார்த்த அந்தப் பெண், பஸ்ஸிலிருந்து இறங்கியோடி தப்பிப்பதற்கு முயன்ற போதிலும், அப்பெண்ணை சுற்றிவளைத்த பயணிகள், அவரைப் பிடித்து, கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.   

இதேவேளை, அந்த மாணவனின் கையிலும், குத்தூசிக் காயம் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தன்னுடைய தாயுடன், கண்டியை நோக்கி தனியார் பஸ்ஸில், கடந்த திங்கட்கிழமையன்று பயணித்துகொண்டிருந்த போதே, இவ்வாறான அசாதாரண நிலைமைக்கு, அம்மாணவன் முகங்கொடுத்துள்ளார்.   

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட புஷ்பியா தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .