2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இடம்பெயர் மக்களின் பிரச்சினை தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்க ஐ.நா பிரதிநிதி உறுதி

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெயர் மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதுடன், கௌரவமான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்குரிய ஒத்துழைப்பை வழங்கப்படும்.

இவ்வாறு ஐ.நா.வின் விசேட பிரதிநிதி லியென் பெஸ்கோ, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் உறுதியளித்தார் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் லியென் பெஸ்கோ, இன்று காலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை கொழும்பில் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தினார்.

இதன்போது அவருடன் கலந்துரையாடிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், மீள்குடியேற்றப்பட்டிருக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முன்னின்று செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், மீள்குடியேற்றப்பட்டிருக்கும் மக்கள் எதிர்நோக்கி வரும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், தற்போது முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும் குறிப்பிட்டனர்.

மேலும், ஐக்கிய இலங்கைக்குள்  மக்கள் சுதந்திரமாக வாழ, வழி வகை செய்ய வேண்டும் எனவும் பெஸ்கோவிடம் வலியுறுத்திய கூட்டமைப்பினர் இந்த விடயங்களுக்காக தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் கோரினர்.

இந்நிலையில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளித்த ஐ.நா.பிரதிநிதி, மீள்குடியேற்றப்பட்டிருக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் முகாம்களிலுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுதல் போன்ற நடவடிக்கைகளில் தமது ஒத்துழைப்பு இருக்கும் என உறுதியளித்தார். அத்துடன் அரசியல் தீர்வு தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாகவும் லியென் பெஸ்கோ குறிப்பிட்டார்.  (S.R)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--