2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

இத்தாலியில் 9 தமிழர் பொலிஸாரால் கைது

Super User   / 2010 மே 10 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிக்கு அரசியல் புகலிடம் கோரிச் சென்ற  இலங்கைத் தமிழர்கள் ஒன்பது பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் உயர் அதிகாரி ஒருவரே தங்களை இத்தாலிக்கு அனுப்பியதாக கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் தெரிவித்தனர். அமைச்சர் ஒருவரின் உதவியாளர் தங்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பிவைத்தாகவும்  அந்த ஒன்பது பேரும் மேலும் குறிப்பிட்டனர்.

எனினும் இதனை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மறுத்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் இத்தாலிக்கு சட்டவிரோதமான முறையில் சென்றிருக்கலாம் எனவும் அவர் மேலும் கூறினார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--