Editorial / 2017 ஜூலை 25 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக, இன்று (25) பதவியேற்கவுள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுதியுள்ள கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சமீபத்தில் இடம்பெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், தாங்கள் அமோக வெற்றியடைந்தமை குறித்து, நான் மகிழ்ச்சியடையவதோடு, மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கலாசாரம், மதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில், இந்தியா-இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும், மிக நீண்ட கால நல்லுறவைப் பேணி வருகின்றது. தங்களது தலைமைத்துவத்துக்குக் கீழும், இருநாடுகளின் நல்லுறவு, மேலும் நீடிக்கும் என்பதை, நான் உறுதியாக நம்புகின்றேன். தங்களது தலைமைத்துவம், இந்தியாவுக்கு செழிப்பான எதிர்காலத்தை வழங்கும் என்று நான் கூறுகின்றேன்.
இரு நாட்டுக்கும் இடையேயான பரஸ்பர நடவடிக்கைகளில், தங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு, நான் காத்திருக்கின்றேன்.
எனவே, எம்முடைய வாழ்த்துகளை ஏற்றுக்கொள்வதோடு, எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
10 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
19 minute ago