2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இந்திய நடிகர் இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக ஐ.தே.க குற்றச்சாட்டு

Super User   / 2010 ஜூன் 04 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நடிகர்களான  அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய்,ஷாருக்கான் ஆகியோர் உட்பட சில முன்னணி இந்திய நடிகர்கள் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் இந்திய நடிகர்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய்,ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், மேற்படி விழாவில் கூடியளவிலான இலாபங்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாகவும் றோஸி சேனநாயக்க  தெரிவித்தார்.  Comments - 0

  • xlntgson Friday, 04 June 2010 09:10 PM

    அவர்களை குறைகூறி என்ன செய்ய? அவர்களை வர விடாமற் செய்த தென்னிந்திய திரைப்பட சங்கத்தை அல்லவா குறைகூற வேண்டும்? கலைஞர்களது ஒற்றுமை கெடும் என்று அவர்கள் பயந்து இருக்கலாம் அல்லவா? பதிலடி கொடுப்பது என்றால் அவர்கள் நடத்தும் விழாக்களுக்கு நாம் போகாமல் இருக்கலாம், என்றாலும் இது இந்திய திரைப்பட விழா நம்முடைய பங்கை நாம் செய்து விட்டோம் என்றே நான் நினைக்கிறேன். வெற்றி தோல்வி விமர்சனத்தை அகில இந்திய திரைப்பட உலகம் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--