Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண, இந்திய மத்திய அமைச்சர்கள் சிலர், எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியன்று, இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், இது தொடர்பான தகவலை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில், அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ஆழ்கடலில் மீன்பிடிக்க இரட்டை மடிவலை, தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை, மீனவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான பயிற்சி, வலைகளைக் கையாள்வதற்கான பயிற்சிகள், மீனவர்களுக்கு அளிக்கப்படவுள்ளன.
இம்மாத இறுதியில், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அமைச்சர்கள் சிலர், இலங்கைக்குச் செல்லவுள்ளனர்” என்று, அவர் மேலும் கூறியுள்ளார் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago