2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களை அனுமதிக்க அமரவீர மறுப்பு

George   / 2016 ஜூலை 13 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை, அது நடக்காது என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களுக்கு எதிராகவும் தமது பிரச்சினைகளை முன்வைத்தும் வட மாகாண மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், அத்துமீறி மீன்படியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .