2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

இன்றும் மூதூர் தெற்கில் 9 பாடசாலைகள் இயங்கவில்லை

Suganthini Ratnam   / 2017 மே 31 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

எட்டு வயதுடைய மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து இன்றும் மூதூர் தெற்கிலுள்ள ஒன்பது  பாடசாலைகள் இயங்கவில்லை.
மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தராது, பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும், அப்பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் மாத்திரம் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர். இதனால், பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதிருந்தன.

பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை  வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, 'குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும்வரை மாணவச் சமூதாயத்தின் போராட்டம் தொடரும்' என்று எழுதப்பட்ட அநாமதேய சுவரொட்டிகள், சில பாடசாலைகளில் ஒட்டப்பட்டுக் காணப்பட்டன.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X