2021 மே 12, புதன்கிழமை

'இனவாதிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீனிபோடக்கூடாது'

Kanagaraj   / 2016 ஜூலை 23 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக காத்திருக்கும் இனவாதிகளுக்கு தீனி போடும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் நடந்துகொள்ளக் கூடாதுதென ஐக்கிதேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது பெரும்பான்மை மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமைகள் ஏற்பட்டு மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதல் சம்பவத்தை பயன்படுத்தி பெரும்பன்மை மாணவர்களை தமிழ் மாணவர்கள் தாக்கிவிட்டதாக விடயத்தை பூதகாரமாக நாட்டில் தற்போது நிலவும் ஜனநாயக வெளிச்சூழலை குழப்புவதற்கு சில சக்திகள் முயற்சிசெய்திருந்தன.

எனினும் அரசாங்கம் உட்பட சகல தரப்புக்களும் கூட்டாக எடுத்துக்கொண்ட முயற்சிகளின் பிரகாரம் நிலைமைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதோடு யாழ்.பல்கலைகழகம் உட்பட நடாளவிய ரீதியில் காணப்படும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சுமூகமான கற்றல் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முக்கியமானதொரு கட்டத்தில் உள்ளது. ந்தநாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சமத்துவமான உரிமைகள் வழங்கப்பட்டு ஒற்றுமையுடன் ஐக்கிய இலங்கைக்குள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்வதற்காக அரசியல் சாசனத்தைஉருவாக்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. நாட்டை கடன் சுமையிலிருந்து மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அத்துடன் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இத்தகையை சூழலில் ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சில இனவாத சக்திகள் இன்னம் நாடு பிளவடையும், மின்சாரக்கதிரை, இராணுவம் மதிக்கப்படவில்லை போன்ற பல்வேறு கருத்துக்களையும் கூறி இனங்களுக்கிடையில் விரிசல்களை தொடர்ந்தும் நீடித்திருக்கவேண்டும் என்ற அடிப்படையில் முனைப்புடன் செயற்படுகின்றன.

இத்தகைய பின்னணியில் தான் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தையும் திரிவுபடுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

எவ்வாறாயினும் யாழ்.பல்கலைக்கழகமானது இந்த நாட்டில் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும். மட்டுமன்றி இனவாதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இத்தகையை சம்பவங்கள் மீண்டும் நிகழாது பொறுப்போடு செயற்படவேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .