2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இரத்தினபுரி, மொனராகலையில் அதிக வெப்பம்

Editorial   / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக இரத்தினபுரி, மொனராகலை மாட்டங்களைச் சேர்ந்தவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் வெப்பநிலை 33 செல்ஸியஸ்களாகவும், மொனராகலை மாவட்டத்தின் வெப்பநிலை  32 செல்சியஸ்களாகவும் காணப்படுகின்றதென அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்தோடு, வடமேல், வடமத்திய, தென் மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் அதிக வெப்பமாக காணப்படுவதால் வெப்பநிலையில் அளவு அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .