2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

நாளை விசேட போக்குவரத்து திட்டம்

Janu   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை 21) நடைபெறவுள்ள மத வழிபாடுகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பொலிஸாரின் அறிவிப்பின்படி, இந்தப் போக்குவரத்துத் திட்டம் செவ்வாய்க்கிழமை (21)  காலை 7:00 மணி முதல் நினைவுத் தின வழிபாடுகள் நிறைவடையும் வரை நடைமுறையில் இருக்கும். இக்காலப்பகுதியில், திருத்தலத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் வாகன  போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் அல்லது பக்தர்களின் வருகை மற்றும் பாதுகாப்பு தேவைகளைக் கருத்திற்கொண்டு மாற்று வழிகளுக்குத் திருப்பிவிடப்படும்.

ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பொறுமையுடன் ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .