2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

இரத்மலானை கொலை விவகாரம்; மூவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 12 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானை பகுதியில் வீடொன்றுக்குள் கூரிய ஆயுதத்தால் மூவர் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மறைந்திருப்பதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் அவர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை, மொரட்டுவை மற்றும் பொல்கஸ்ஓவிட ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (12) கல்கிஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .