2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ வீரர் துஷ்பிரயோகம்: இளைய பிக்கு கைது

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ வீரர் ஒருவரை மூன்று நாட்களாகக் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும், மாதம்பை - செத்சிறிகம பகுதியிலுள்ள விகாரையில் உள்ள 25 வயதான இளைய பிக்கு ஒருவர், மாதம்பைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இராணுவ வீரர், வவுனியா - கனகராயன்குளம் இராணுவ முகாமில் பணியாற்றும் 25 வயதானவர் எனவும் இவர், ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ வீரருக்கும் பிக்குவுக்கும், பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளதாகவும் நீண்டகாலமாக அவர்கள் இவ்வாறு பேஸ்புக் ஊடாகக் கருத்துகளைப் பரிமாறி வந்துள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24ஆம் திகதியன்று, பிக்குவின் அழைப்பின் பேரில் மாதம்பைப் பகுதியிலுள்ள விகாரைக்குச் சென்றுள்ள இராணுவ வீரர்;, அங்கு தங்கியிருந்த நிலையில், கடந்த 27ஆம் திகதியன்றே மீளவும் பயிற்சி நிலையத்துக்கு சென்றுள்ளார்.

பின்னர், அங்கு அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட மாதம்பை பொலிஸார், குறித்த பிக்குவைக் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிக்குவை, சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X