2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

அரசியலமைப்பு பேரவையை இரு மாதத்திற்குள் நிறுவ ஏற்பாடு-பிரதமர்

Super User   / 2010 மே 27 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பு பேரவை நிறுவப்படும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதம் அடுத்த ஜூன் மாதம் அல்லது ஜூலை மாத முற்பகுதியில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், அரசியலமைப்பு பேரவையை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார்.  மேற்படி பேரவை ஊடாக பல ஆணைக்குழுக்களிலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு பேரவையை நிறுவுவதற்கு தவறியதன் காரணமாகவே, கடந்த சில மாதங்களாக தேர்தல்கள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உட்பட பல முக்கிய ஆணைக்குழுக்கள் செயற்படாதிருந்ததாகவும் டி.எம்.ஜயரட்ன சுட்டிக்காட்டினார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதி சேவைகள் ஆணைக்குழு தேர்தல்கள் ஆணைக்குழு  ஆகியவற்றிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவிருப்பதாகவும் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.

  Comments - 0

  • xlntgson Thursday, 27 May 2010 09:49 PM

    நிறுவ இரண்டு மாதம் அல்ல கூடுதலாக எடுத்துக்கொண்டாலும் ஒரு முடிவுக்கு வர எத்தனை ஆண்டுகள் போகும்? சிறிய இனங்களை மறந்து விடாதீர்கள். எந்த இனமும் தங்களுடைய குறைகளை பிறகு முன்வைக்கக்கூடாது.எல்லாரும் திருப்திப்படும் வகையில் இருந்தால்தான் பிரச்சினை ஏற்படாது, எங்களை உள்ளடக்காத ஒரு தீர்வுக்கு நாங்கள் ஏன் கட்டுப்பட வேண்டும் என்று ஏதாவது ஓர் இனம் பிரச்சினை பண்ண அதற்கு ஒலிவாங்கியை வழங்க எத்தனை ஒலி ஒளிபரப்பு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன, என்று தெரிந்து கொண்டால் நல்லது, உலகில்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--