2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

இறந்து கரையொதுங்கும் மீன்கள்

சண்முகம் தவசீலன்   / 2017 ஜூன் 02 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன் 

முல்லைத்தீவு, வட்டுவாகல் கடல்நீரேரியின் முகத்துவாரத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள்  இறந்த நிலையில் கரையொதுங்குகின்றன.

வட்டுவாகல் கடல் நீரேரி, முல்லைத்தீவு பெருங்கடலைச் சேரும் இடத்தில் குறித்த மீன்கள் இறந்த நிலையில் ஒதுங்கிவருகின்றன.

பல ஆயிரக்கணக்கில் இம்மீன்கள் இறந்து ஒதுங்குவது ஏன் எனத் தெரியவில்லையென, குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று, 2015ஆம் ஆண்டும் இவ்வாறு மீன்கள்  இறந்து ஒதுங்கியதாகத் தெரிவிக்கும் வட்டுவாகல் கடற்தொழிலாளர் சங்க மீனவர்கள், இறந்த மீன்களை நீரேரியில் இருந்து  அகற்றி, குழிகள் வெட்டி புதைத்துவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .