2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கான விமானசேவைகள் ரத்து

Super User   / 2010 மே 17 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் செல்லவிருந்த விமானசேவைகளும் மற்றும் இலங்கையை வந்தடையவிருந்த விமானசேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் பரவிவரும் சாம்பல் புகை மூட்டம் காரணமாகவும், இலங்கையின் சீரற்ற காலநிலையைக் கவனத்திற்கொண்டும் மேற்படி விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக பண்டாரநாயக்க விமானநிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்நிலையில், ஐஸ்லாந்திலுள்ள எரிமலைக் குமுறலால் பரவிவரும் சாம்பல் புகை காரணமாக ஐரோப்பாவில் சில விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதுடன், இன்று அதிகாலை ஐரோப்பாவுக்கு புறப்படவிருந்த விமானசேவையொன்று இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை,  இன்று அதிகாலை இலங்கையை வந்தடையவிருந்த இரண்டு விமானங்கள் இந்தியாவில் தரையிறக்கப்பட்டிருப்பதாகவும்  பண்டாரநாயக்க விமானநிலையத்தின் அதிகாரி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--